• Sep 20 2024

தனுஷ் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா மோகன்-அவருக்கு பதில் இவரா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் தனுஷ்.

இவர் நடிகராக மட்டுமன்றி பின்னணி பாடகர், இயக்குனர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவை கலக்கி கொண்டுள்ளார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாறன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இது தவிர தற்பொழுது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.அத்தோடு இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் இதற்குமுன் ராக்கி, சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணையும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாம்.

ஆனால், பிரியங்கா மோகனின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறார்களாம் படக்குழு என தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது சூர்யா நடித்து வரும் சூர்யா 41 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement