• May 19 2024

என்னமா இப்படி பண்ணுறீங்களேமா... Bed ரூம் சீனில் நடிகருடன் நெருக்கமாக பிரியங்கா மோகன்... வெளியானது ட்ரைலர்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் திரைபடத்தில் நடித்த நடிகை பிரியங்கா மோகனா ரசிகர்கள் மத்தியில் தற்போது கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் ஒரு படத்தில் Bed ரூம் சீனில்  நடிகருடன் நெருக்கமாக  நடித்திருக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.  


தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் பிரியங்கா மோகன். இதன்பின் தமிழுக்கு வந்த பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 


இதை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது கேப்டன் மில்லர் மற்றும் பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு திரைப்படங்கள் மட்டுமின்றி இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படமும் ரிலீஸுக்கு காத்துருக்கிறது.


டிக் டாக் என தலைப்பிட்டுள்ள இப்படத்தில் சினிமாவிற்கு வந்த புதிதில் நடித்துள்ளார் பிரியங்கா மோகன். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நிலையில் பிரியங்கா மோகன் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.


இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன், Bed ரூம் சீன் மற்றும் நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி நம்ம பிரியங்கா மோகனா இது என கேட்டு வருகிறார்கள் இந்த திரைப்படம் எதிர் வரும் டிசம்பர் 29ம் திகதி திரைக்கு வரவிருக்கிறது. 


Advertisement

Advertisement