• Nov 07 2025

பிரியங்கா சோப்ராவின் 7ஆண்டு காதல் பயணம்.. இன்ஸ்டாவில் வைரலான போட்டோஸ்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை பிரியங்கா சோப்ரா நேற்று தனது திருமண நாளை மிக நிம்மதியாகவும் காதலுடனும் கொண்டாடியுள்ளார். அவர் கணவர் நிக் ஜோனாஸ் உடன் இணைந்து வெளியிட்ட அதிரடியான போட்டோவை பகிர்ந்துகொண்டு, “2018‑2025” என்ற காலத்தின் நினைவுகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


பிரியங்கா தனது பதிவில், “இன்று உன்னைக் கொண்டாடும் இந்த வேளையில், என் அன்பே, உன்னுடன் பல வருடங்களாகச் செலவழிக்க எனக்குக் கிடைந்த அற்புதமான செப்டம்பர் 16 ஆம் தேதிகளை நான் நினைவு கூறுகிறேன், உன்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன். நாங்கள் உன்னை தினமும் கொண்டாடுகிறோம்... இதோ 2025‑2018!” என்று கூறியுள்ளார். 


பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் இருவரும் 2018 ‑ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்த நாள் முதல், அவர்கள் பல போராட்டங்களை கடந்து இன்று வரையிலும் உறவின் ஒற்றுமை மற்றும் பரஸ்பர ஆதரவோடு பயணித்து வருகின்றனர்.


இம்முறை பிரியங்காவின் பதிவில் குறிப்பிட்ட “2018‑2025” என்பது அவர்களின் திருமணத்தின் ஆரம்பம் முதல் இன்றுவரை கடந்து வந்த ஆண்டுகளுக்கு ஒரு மனநிறைவை காட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு தருணமும் ஒரு நினைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement