• Jul 04 2025

விஜயோட நடிக்கிறேன் என்பதே பெருமை.. ஜனநாயகன் படம் குறித்து பிரியாமணி ஓபன்டாக்.!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம், 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.


இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பிரபல நடிகை பிரியாமணி நடித்திருக்கிறார். தற்போது, இப்படத்தில் தனது பங்களிப்பு குறித்து அவர் தெரிவித்த உற்சாகமிக்க பேச்சு, ரசிகர்களிடையே வைரலாகி  வருகின்றது.

பிரியாமணி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் எனப் பல மொழிகளில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்த இவர், அதன் பின் பல படங்களிலும், இணையத் தொடர்களிலும் நடித்து வருகின்றார்.


தற்போது விஜயுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர் கூறிய வார்த்தைகள் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகை பிரியாமணி, “விஜயுடன் நடிப்பது மிகவும் உற்சாகமான அனுபவம். இவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் என்றாலும், மிகவும் எளிமையானவர். ‘ஜனநாயகன்’ ஒரு சூப்பர் ஸ்பெஷல் படம். இதில் நான் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது என் கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறேன்.” எனக் கூறியிருந்தார்.


Advertisement

Advertisement