சமீபத்தில் அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிய பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவான படம் Dude மிகப் பெரிய கவனம் பெற்றது. படத்தின் கதைக்களம், இசை மற்றும் நடிகர்களின் நடிப்பு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் முக்கிய பங்கு வகிக்கும் பாடல்களில் ஒன்று “ஒரு அலை அவ.. கலை அவ..…” எனும் பாடல், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், பிரபல நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் இந்தப் பாடலை தனது வெர்சனில் பாடியுள்ளார். இந்த வெர்சன், ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் பாடிய இந்த பாடல் தற்போது சமூக ஊடகங்களில் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

அத்துடன் இந்தப் பாடலைக் கேட்ட ரசிகர்கள் "இது நம்ம பிரியாவா? என்ன voice..!" என்று தங்களது மகிழ்ச்சியை கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்துள்ளனர். வைரலான வீடியோ இதோ.!
Listen News!