• Oct 25 2025

சீரியலில் நடிக்கும் அமெரிக்க தொழிலதிபர்.. திரையுலகை அதிரவைத்த அப்டேட்.! முழுவிபரம் இதோ.!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

ஹிந்தி டிராமா ரசிகர்களுக்கு தற்பொழுது ஒரு பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது. பிரபல அமெரிக்க தொழிலதிபர் மற்றும் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் பிரபல ஹிந்தி தொடரில் நடிப்பது உறுதியாகியுள்ளது.


‘கியோங்கி சாஸ் பீ, கபி பஹு தீ’ என்ற தொடரின் முதல் பாகம் 2000களில் ‘ஸ்டார் பிளஸ்’ சேனலில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த தொடர் இந்திய குடும்ப வாழ்க்கை, உறவுகள் மற்றும் தந்திரங்களை மிக அழகாக காட்சிப்படுத்தியது.

இதில் முக்கிய கதாபாத்திரமாக ஸ்மிருதி இரானி நடித்த துளசி விரானி காணப்பட்டது. இந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தது. இந்த தொடரின் கதைக்களம் குடும்ப உறவுகள், உறவுகளின் வலிமை மற்றும் சவால்களை நுட்பமாக காட்டியது.


இப்போது, ‘கியோங்கி சாஸ் பீ, கபி பஹு தீ’ தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் துளசி விரானி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இரண்டாம் பாகம் புதிய கதாபாத்திரங்கள் மற்றும் புதிய சவால்களை அடையாளப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மீண்டும் தொடரின் புதிய திருப்பங்களைக் காண ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த தொடரில் மிகப்பெரிய திருப்பமாக, பிரபல அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement