• May 20 2024

பிரபல நகைக்கடை விழாவில் முக்கிய நட்சத்திரங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ப்ரியா பிரகாஷ் வாரியர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கேரளாவைச் சேர்ந்த நடிகை ப்ரியா வாரியார் ஒரு அடார் லவ் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இப்படம் இவருக்கு சிறந்ததொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு இந்திய கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆளுமைக்குரிய நடிகையாகவும் மாறியுள்ளார்.


2020 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி பங்களா என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக பிரமாணித்தார்.தொடர்ந்தும் தெலுங்கில் இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.ஆனால் முதல் படமான அடர்ட் லவ் படம் கொடுத்த அங்கீகாரம் இவருக்கு மற்ற படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. 


இதனால் வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே ஒப்பந்தமாகினார்.இதனால் இவர் அவ்வப்போது தனது  அழகான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார். இது தவிர கிட்டத்தட்ட 8 படங்களில் ஒப்பந்தமாகி நடித்தும் வருகின்றார்.


இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் ப்ரியா பிரகாஷ் வாரியர். கல்யாண் ஜூவல்லர்ஸ் சார்பாக நடத்தப்பட்ட நவராத்திரி விழா புகைப்படங்கள் தான் அவை.அந்த விழாவில் பிரபு நாகார்ஜுனா, மாதவன், சிம்பு, விக்ரம் பிரபு, அருண் விஜய்,ரன்பீர் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது அனைத்தும் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement