• Dec 07 2024

நடிகை ராசி கன்னாவை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி... நெகிழ்ச்சியில் நடிகை...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

"தி சபர்மதி ரிப்போர்ட்" என்ற திரைப்படம் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம். இப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.கடந்த நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் திட்டமிட்ட அரசியல் பிரச்சார படம் என்ற விமர்சனங்களை பெற்று வந்தது.  


இருப்பினும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களே வந்தன. அத்தோடு இந்தப் படத்தை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தி சபர்மதி ரிப்போர்ட் திரைப்படம் சமீபத்திய வரலாற்றின் மிகவும் அவமானகரமான நிகழ்வின் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ள சிறந்த படம்” என பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை ராசி கன்னா இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இது தொடர்பாக கூறுகையில்.  'மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையில் இதுபோன்ற ஆதரவை நான் எதிர்பார்க்கவில்லை.பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசயல் தலைவர்களின் பாராட்டு நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளிக்கிறது  என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். 

Advertisement

Advertisement