அயோத்தில் உள்ள ராமர் கோவிலில் இன்று மதியம் 12.30 மணி அளவில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக, வியாழக்கிழமை மதியம் 1.28 மணியளவில், 51 அங்குல ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டது. இன்று ராமர் அவதரித்த அபிஜித் முகூர்த்த வேளையில், சூரியன் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவிற்கு திரையுலக பிரபலங்களும் வருகை தந்துள்ளனர்.
நடிகர் சிரஞ்சீவி,அமிதாப் பச்சன், பவன் கல்யாண், ரன்பீர் கபூர், அனில் கும்ப்ளே போன்ற பிரபலங்கள அயோத்திக்கு வருகை தந்துள்ளனர். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் வருகை தந்திருந்தார்.





Listen News!