• Feb 03 2026

Bigg Boss தினேஷ் பிரபல சீரியல் நடிகையை சந்தித்துள்ளார்... யாரை சந்தித்தார் தெரியுமா? நடிகை வெளியிட்ட புகைப்படம் இதோ...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 7 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை தமிழில் எந்த ஒரு பிக்பாஸ் வரலாற்றிலும் நடக்காத விஷயமாக வைல்ட் கார்ட்டு நுழைந்து வெற்றியாளராகியுள்ளார் அர்ச்சனா. 


சீரியல் நடிகை அர்ச்சனா வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து அனைவருக்கும் சவால் கொடுக்கும் வகையில் விளையாடி இப்போது 7வது சீசனின் வெற்றியாளராகிவிட்டார். அவர் வெற்றிப்பெற்றதும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. 


அர்ச்சனாவை போல் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்தவர் தான் தினேஷ். இவரும் நிகழ்ச்சிக்குள் நுழைந்ததில் இருந்து நன்றாக விளையாடி வந்தார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய இவர் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்.


  அதேபோல் அண்மையில் பிரபல சீரியல் நடிகை பிரேமி வெங்கட்டை சந்தித்துள்ளார். அவருடன் வெளியேவும் சென்றுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகையே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.

 

Advertisement

Advertisement