• Sep 19 2024

பல ஆண்டுகளுக்கு பின் நயன்தாரா படத்தில் பிரபு தேவா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஓர் தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டவர்.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளது.மேலும் இப்படத்தை தொடர்ந்து கனெக்ட், காட் ஃபாதர் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதில் தெலுங்கில் ஜெயம் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் காட் ஃபாதர் படத்தில் கதாநாயகியாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

மேலும் இப்படம் மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் ரீமேக் ஆகும். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த பிரியதர்ஷினி கதாபாத்திரத்தில் தான், நயன்தாரா நடித்து வருகின்றார்.

இந்நிலையில், இப்படத்தில் நடன இயக்குனராக பிரபு தேவா கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளார்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளாராம் பிரபு தேவா.

எனினும் இதன்முலம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபு தேவா மற்றும் நயன்தாரா ஒரே படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement