தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ள பிரபாஸ் நடிப்பில் உருவான புதிய படம் ‘தி ராஜா சாப்’, நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
இந்த படம், இயக்குநர் மருதி இயக்கத்தில் உருவானது. இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரிதி குமார், சஞ்சய் தத், விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஹாரர்-பேண்டஸி வகையை சேர்ந்த கதை, சுவாரஸ்யமான காட்சிகள் மற்றும் வி.எப்.எக்ஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இப்படம் வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது. படம் வெளியான முதலாவது நாளில், விமர்சனங்கள் கலவையானவை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ‘தி ராஜா சாப்’ உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் குறிப்பு, ஹாலிவுட் படங்களுக்கு கிடைத்த பெரும் சாதனை என தெரிவிக்கப்படுகிறது.
Listen News!