தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம், இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், தற்போது மக்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பை பெற்று வருகிறது.
சமூக மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள ‘பராசக்தி’, வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரையரங்குகளில் விசில், கைதட்டல் என படம் ஒரு திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகின் பல பிரபலங்களும் ‘பராசக்தி’ திரைப்படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளனர். அந்த வகையில், நடிகை ஸ்ரீலீலா, நடிகை ஷாலினி, நடிகர் துருவ் விக்ரம், மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி உள்ளிட்டோர் திரையரங்கில் படம் பார்க்க சென்ற போட்டோஸ் தற்பொழுது வெளியாகியுள்ளது.
பிரபலங்கள் சாதாரண ரசிகர்களைப் போலவே தியேட்டருக்குச் சென்று படத்தைக் கண்டு ரசித்தது, சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்ததுடன், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!