• Jan 19 2025

நடிகர் சித்தார்த்தின் காலில் விழுந்த பிரபல வில்லன் நடிகர், அடடே இது தான் காரணமா?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் நடிகராக மட்டுமல்லாது பாடகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் தான் நடிகர் சித்தார்த. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சித்தார்த்தின் திரை வாழ்க்கை என்பது பல்வேறு ஏற்ற இறக்கங்களை கொண்டதாகவே இன்று வரை இருந்து வருகிறது.

 ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் இறுதியாக சித்தா என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பைப் பெற்றது முதன் முறையாக சித்தப்பாவாக அதாவது ஒரு பெண் குழந்தைக்கு தாயுமானவனாக புது பரிமாணத்தில் தோன்றி அதிலும் முத்திரை பதித்துள்ளார். 


பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக இப்படம் பேசியிருந்தது.இப்படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் தான் நடிகர் ரமேஷ் தர்ஷன்.இவர் சமீபத்தில் நடந்த சித்தா படத்தின் வெற்றி விழாவில் மிகவும் உருக்கமாக கண்கலங்கி பேசினார். 

அது மட்டுமின்றி தனக்கு இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அருண் குமாருக்கும், நடிகர் சிதாரத்திற்கும் நன்றி என கூறி அவர்கள் காலிலும் விழுந்தார்.அதன்பின் பேசிய ரமேஷ் தர்ஷன் 20 ஆண்டுகளாக நான் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறேன். எனக்கு இப்படம் அடையாளத்தை கொடுத்துள்ளது என மிகவும் உருக்கமாக பேசினார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement