• Mar 29 2024

'தளபதி 68' இல்... விஜய்யோடு இணையப்போகும் பிரபல நடிகர்... ப்பா இந்த டுவிஸ்ட நாம எதிர்பார்க்கலயே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் உருவாகி உள்ள 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகின்றார். 

ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள இப்படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் 'தளபதி 67' திரைப்படத்தில் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ளதால் மற்றப்படங்களை விட ரசிகர்கள் இப்படத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் மிகவும் எளிமையான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. 

மேலும் இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் இப்படத்தின் உடைய படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாத நிலையில் அடுத்ததாக 'தளபதி 68' படத்தை பற்றிய தகவல்கள் இணையத்தில் செம ட்ரெண்டாகி வைரலாகி வருகின்றது.

அதாவது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் 'தளபதி 68' படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கின்றது. இந்த தகவல் வந்த நாளிலிருந்து ரசிகர்கள் செம எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். மேலும் தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த அட்லீ தற்போது நான்காவது முறையாக இப்படத்தின் மூலம் விஜய்யை இயக்கவுள்ளார்.


அதுமட்டுமல்லாது அட்லீ 'தளபதி 68' திரைப்படத்தில் ஷாருக்கானை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இதை கேட்ட தயாரிப்பு நிறுவனமானது ஷாருக்கான் மட்டும் 'தளபதி 68' திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சில காட்சிகள் நடித்தால் செமையாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 

இந்நிலையில் கண்டிப்பாக அட்லீ ஷாருக்கானை 'தளபதி 68' திரைப்படத்தில் நடிக்க வைப்பார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் நம்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement