• Apr 15 2026

ஜனநாயகன் லீக் பின்னணியில் அரசியல் சதி? முதல்வரின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

shali / 3 days ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது ரசிகர்களுக்கும், திரையுலகத்திற்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்பே ஆன்லைனில் லீக் ஆனது, படக்குழுவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிராக பலரும் ஒன்றிணைந்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.


இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் இதுவரை எந்த கருத்தையும் வெளியிடாமல் அமைதியாக இருப்பது கவனிக்கப்படுகிறது. அதேசமயம், அவரது அரசியல் கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, படம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதத்திற்கும், தற்போது ஏற்பட்ட பிரச்சனைகளுக்கும் L. முருகன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் காரணம் என குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் M. K. ஸ்டாலின் முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபயிற்சி மேற்கொண்ட போது செய்தியாளர்கள் ஜனநாயகன் படம் குறித்து கேட்ட கேள்விக்கு, “இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை...” என சுருக்கமாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் இந்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், இந்த விவகாரம் மேலும் பேசுபொருளாக மாறியுள்ளது. படம் தொடர்பான பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்படும் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement