நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘With Love’ சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது அந்த படக்குழுவின் புதிய சந்திப்பு ஒன்று சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘With Love’ திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படம், இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.

படத்தின் இசையும், காட்சியமைப்பும், புதிய முகங்களின் நடிப்பும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
‘Tourist Family’ படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த், ‘With Love’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குநராக இருந்தவர் ஹீரோவாக மாறியிருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகின் பிரபலமான நடிகை அனஸ்வரா ராஜன், இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள அவர், தமிழிலும் தனது நடிப்பு திறமையை நிரூபிக்க முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், ‘With Love’ படத்தின் தயாரிப்பாளர் செளந்தர்யா ரஜினிகாந்த், தமிழக முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!