நடிகர் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக பராசக்தி திரைப்படம் உலகளவில் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக வெளியானது. அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உயர்ந்தது. தற்போது இந்த படம் மீதும் மிகப்பெரிய நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது,
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படம் ஜனநாயகன் திரைப்படத்துடன் மோத தயாராக இருந்தது. ஆனாலும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. இதனால் சுமார் தமிழகத்தில் மட்டுமே 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் பட்டித் தொட்டி எங்கும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியதுடன் பல இடங்களில் அதிகாலை காட்சிக்கு திரையரங்குகள் நிறைந்த காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், பராசக்தி திரைப்படம் இந்தியாவில் மட்டுமே முதல் நாளில் 11.50 கோடிகளை வசூலித்துள்ளது. இன்னும் இந்த படத்தின் வசூல் வார இறுதி நாட்களில் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!