• Dec 08 2023

கொடுக்கிற தெய்வம் கூரைய பிச்சிட்டு கொடுக்குது... ஒத்த பாடல் மூலம் பெத்த லாபம்... காவலா தமன்னாவுக்கு அடித்த பெரிய அதிஷ்டம்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னாவிற்கு தமிழில் ரஜினி மூலம் கிடைத்த வாய்ப்பு தான் ஜெயிலர் படத்தில் காவாலா சாங் நடனம். இந்த ஒரு பாடலுக்கு ஆடியதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவிலும் இவருடைய புகழ் பரவி விட்டது.


எல்லா பக்கமும் இந்த பாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அப்படிப்பட்ட இந்த பாடலில் இவர் ஆடியதற்கு வாங்கிய சம்பளம் 3 கோடி. இதன் மூலமாக தற்போது இவர் தினந்தோறும் 1கோடி சம்பாதித்து வருகிறார்.

அதாவது ரொம்பவே ஹிட் ஆனதால் நார்த் இந்தியா பக்கம் நடக்கும் பெரிய பெரிய திருமண நிகழ்ச்சிக்கு தமன்னாவை ஆடுவதற்கு கூப்பிடுகிறார்களாம். அதுவும் இவர் ஆடுகிறார் என்றால் இவருக்காக சம்பளம் ஒரு நாளைக்கு ஒரு கோடியும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.


ஒரு வாரத்துக்கு 5 கோடி சம்பாதிக்கும் அளவிற்கு தற்போது இவருக்கு அதிர்ஷ்டம் கைகூடி வந்திருக்கிறது. சினிமாவில் நடிச்சா கூட இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியுமானு தெரியவில்லை. ஏனென்றால் அதைவிட அதிக சம்பளம் கிடைப்பதால் தற்போது இவருடைய முழு கவனமும் இந்த மாதிரி நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதில் மட்டுமே இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement