தமிழ் திரையுலகத்திலும் தொலைக்காட்சி உலகத்திலும் பிரபலமாக திகழும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது கடுமையான சர்ச்சைகளின் மையமாக உள்ளார். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி கடந்த சில மாதங்களாக உருவாகியுள்ள திருமண மோசடி குற்றச்சாட்டு தற்போது மேலும் பெரும் திருப்பத்தை எடுத்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் உடன் சட்டபூர்வமாகவே திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தையாக உள்ளார். இந்நிலையில், ஆடை வடிவமைப்பாளர் மற்றும் ஸ்டைலிஸ்ட் ஜாய் கிரிசில்டாவுடன் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில மாதங்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
அந்த திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டதோடு, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. காரணம், ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, ஜாய் கிரிசில்டா தனது பக்கத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ரங்கராஜ் தன்னை ஏமாற்றி, “முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன்” என்று கூறி திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறினார். மேலும், கர்ப்பமாக இருந்தபோதும் தன்னிடம் இருந்து விலகி விட்டதாகவும், குற்றம்சாட்டினார்.
அவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை மகளிர் காவல் நிலையத்தில் முறையிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் வழக்கை பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தது.
இந்த வழக்கில் ரங்கராஜ் மீது மகளிர் ஆணையம் சம்மன் பிறப்பித்தது. அதன்படி, அவர் இன்று (31 அக்டோபர் 2025) ஆணையத்தின் முன் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

விசாரணை நடைபெறவுள்ள அதே நாளில், புதிய தகவல் ஒன்று தற்பொழுது வெளிவந்துள்ளது. ஜாய் கிரிசில்டா ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை முதல் இணையத்தில் பரவிய தகவலின்படி, அவர் ஆண் குழந்தையைப் பெற்றதாக கூறப்படுகிறது. இது உண்மையென உறுதிப்படுத்தப்பட்டால், ரங்கராஜ் மற்றும் கிரிசில்டா இடையேயான வழக்கு மேலும் சிக்கலாகும் என சட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.
 
                              
                             
                             
                            _6904592b9b305.jpg) 
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!