• Apr 14 2026

ஆடை அணிந்து கொண்டே இப்படியா? பாயல் ராஜ்புத் பகிர்ந்த ஷாக்கிங் வீடியோ.! சூடப்போகுதே..

shali / 1 day ago

Advertisement

Listen News!

லெஜெண்ட் சரவணன் நடித்துள்ள “லீடர்” படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னதாக அவர் நடித்த “லெஜண்ட்” படத்திற்கு கிடைத்த விமர்சனங்களையும் ட்ரோல்களையும் கருத்தில் கொண்டு, இந்த முறை அவர் தனது நடிப்பில் அதிக கவனம் செலுத்தியதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த முயற்சி படத்தின் வரவேற்பில் ஒரு அளவிற்கு பிரதிபலித்துள்ளது.


இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாயல் ராஜ்புத் நடித்துள்ளார். “லீடர்” படத்தின் வெற்றி அவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால், வசூல் நிலையும் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பாயல் ராஜ்புத் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதில், அவர் தனது ஆடை அணியும் தருணத்தில் ஆடை பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருப்பவர் டிரெஸ் போட்டுக் கொண்டே அயன் பண்ணிய வீடியோ வெளியாகியுள்ளது. குறிப்பாக, அந்த வீடியோவில் இடம்பெற்ற சில காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


இதற்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் அதிர்ச்சியடைந்தாலும், பலர் இதை பொழுதுபோக்கு நோக்கில் எடுத்துக்கொண்டு கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement