பார்த்திபன் நடித்து இயக்கிய ‘டீன்ஸ்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பார்த்திபன் இந்த படத்தின் டிக்கெட் விலை 100 ரூபாய் தான் என்று கூறி இருந்தார். இதனை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர் என்பதும் இதனால் இந்த படத்திற்கு வரும் ஆடியன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இன்று ‘டீன்ஸ்’ படத்தின் முன்பதிவு அனைத்து திரையரங்குகளிலும் தொடங்கி உள்ள நிலையில் திடீரென பார்த்திபன் 100 ரூபாய் டிக்கெட் விஷயத்தில் பல்டி அடித்துள்ளார். சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: 100 ரூ +ஜிஎஸ்டி etc விலையில் டிக்கெட் என் விருப்பம்.விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் சம்மதித்த பின்னே இம்முடிவு.இருப்பினும் சில இடங்களில் முன் பின் இருக்கும். பொறுத்தருள்க! ரிசர்வேஷன் துவங்கிவிட்டது. இன்று Thursday ஆகிவிட்டது, நாளை TEENZ day ஆக்குங்கள்
இந்த நிலையில் ரசிகர்கள் ‘டீன்ஸ்’ படத்தை பார்ப்பதற்கு முன் பதிவு செய்யச் சென்றபோது வழக்கம் போல் பல திரையரங்குகளில் கிட்டத்தட்ட ரூ.190 டிக்கெட் தான் காண்பிக்கிறது என்றும் 100 ரூபாய் டிக்கெட் என்பது ஏமாற்று வேலையா? என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சில திரையரங்குகளை மட்டுமே 100 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி என்று இருக்கிறது என்றும் பார்த்திபன் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் சென்னையின் முக்கிய திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில் இன்னும் இந்த படத்திற்கு ஒரு டிக்கெட் கூட முன் பதிவு செய்யப்படவில்லை என்பது பரிதாபமாக பார்க்கப்படுகிறது.
Listen News!