• Dec 04 2024

இனி உலகநாயகன் இல்ல விண்வெளி நாயகன்! ரோபோ சங்கர் ட்ரெண்டிங் டாக்...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் இனிவரும் காலத்தில் உலகநாயகன் என்று அழைக்காமல் , கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ kh என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.


உலகநாயகன் பட்டத்தை துறந்ததாக தெரிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பல கட்ட யோசனைகளுக்கு பிறகே இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் ஓரளவு சமாதானம் ஆக்கினார்கள்.

d_i_a


இது குறித்த பலரும் பேசிவரும் நிலையில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். "கமலை உலக நாயகன் என்ற சிறிய கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை. அவர் விண்வெளி நாயகன் ஆவார். உலகத்திலேயே விண்வெளி நாயகன் என்பவர் ஒருவர் மட்டும் தான், அவர்தான் கமல்ஹாசன். வேறு யாருக்கும் இந்த தலைப்பை சொல்லவே முடியாது. 


அதனால் அவர் இனிவேல் உலகநாயகன் கிடையாது. இனிமேல் அடிக்கப்படும் போஸ்டர்களில் விண்வெளி நாயகன் என்று தான் குறிப்பிடப்படும். இனிமேல் அவரை நாங்கள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போகிறோம்" என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement