• Jan 18 2025

கோவிந்தா கோவிந்தா! விடாமுயற்சிக்கு முட்டு கட்டை போட்ட அஜித்! பதறும் தல ரசிகர்கள்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். ஏனென்றால் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படம் ஒன்றாக தான் வெளியானது. அதன் பிறகு விஜய்க்கு லியோ மற்றும் கோட் படங்கள் வெளியாகிவிட்டது. 


அஜித்தின் விடாமுயற்சி படத்திற்காக பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பம் முதலே விடாமுயற்சி படத்திற்கு பல சிக்கல் வந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக இப்போது தான் படப்பிடிப்பை தீவிரமாக நடத்தி வந்தனர். அடுத்த வருடம் ஜனவரி மாதம் எப்படியும் படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

d_i_a


அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக சில காட்சிகளில் தாடி வைத்து அஜித் நடிக்க வேண்டியது இருந்ததாம். அதற்காக இப்போது தாடியுடன் அஜித் இருக்கிறார். அதுவும் வெளிநாடுகளில் இன்னும் சில காட்சிகள் குட் பேட் அக்லி படத்திற்கான படப்பிடிப்பு எடுக்க வேண்டி இருக்கிறது.


இதில் என்ன சிக்கல் என்றால் இப்போது விடாமுயற்சி சூட்டிங் நடக்க உள்ளதாம். அதில் அஜித் தாடி இல்லாமல் நடிக்க வேண்டுமாம். விடாமுயற்சி படத்திற்காக இப்போது ஷேவிங் செய்தால் மீண்டும் தாடி வளர சிறிது காலம் ஆகும். ஆகையால் விடாமுயற்சி படத்தை ஒதுக்கி வைத்து விட்டு இப்போது குட் பேட் அக்லி சூட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளார். அப்போது இப்போதைக்கு விடாமுயற்சி வெளியாகாது என நெட்டிசன்கள் கதைவருகின்றனர். 


Advertisement

Advertisement