• Apr 21 2025

இனி ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுங்க! நான் சென்னைக்கு வந்ததுல இருந்து பார்க்கிறேன் பெண்கள் மட்டும் தான்! வைரலாகும் விஜய் தேவர் கொண்டாவின் ஸ்பீச்..

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் ரஜனி கமலுக்கு அடுத்ததாக முன்னணியாக இருக்கும் நடிகர்கள் விஜய் , அஜித் , சூர்யா போன்று தெலுங்கில் சிரஞ்சீவி , நாக அர்ஜுன் க்கு அடுத்து முன்னணியாக இருக்கும் நடிகர் விஜய் தேவர் கொண்டா ஆவார். இந்திய அளவில் பிரபலமான அதிக  சம்பளம் வாங்கும் நடிகர்களில்  ஒருவராவார். இவர்  நடித்துள்ள பேமிலி ஸ்டார் திரைப்படத்திற்காக கொடுத்த இன்டெர்வியுவில் பேசிய விடயங்கள் வைரலாகி வருகின்றன.


பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவர் கொண்டா மற்றும் முருநல் தாகூர் நடிப்பில் தயாராகும் கமெர்சியல் திரைப்படமே "பேமிலி ஸ்டார்" ஆகும். குறித்த திரைப்படம் ஏப்ரல் 5 ஆம் திகதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்தே குறித்த படத்தின் ப்றோமோஷனுக்காக பல தமிழ் யூடியூப் தளங்களில் பேர்ட்டி கொடுத்து வருகின்றனர்.


அவ்வாறே பிரபல யூடியூப் தளம் ஒன்றில் அவர் கூறுகையில் " நான் சென்னைக்கு வந்ததில் இருந்து பார்க்கிறேன் நான் பங்கேற்க்கும் ஷோ களில் ஆண்களே இல்லை அனைவரும் பெண் ஆங்கராகவே உள்ளது. என்னிடம் உள்ள பௌன்சர்களும் இவ்வாறே பெண்கள் வந்தால் அவர்களை மரியாதையோடு அழைத்து வந்து புகைப்படம் எடுக்க விடுவார்கள். ஆனால் ஆண்கள் வேர்த்து அடிபட்டு வருவார்கள். இனி ஆண்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கள்" என நகைச்சுவையாக விஜய்தேவர் கொண்டா கூறிய காணொளிகள் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement