• Apr 24 2026

உங்க கட்சியில யாரும் ஜெயிக்க கூடாது.. விஜய்க்கு எதிராக அரசியலில் களமிறங்கிறாரா ஜூலி?

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், விஜய் மற்றும் அவரது கட்சி தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த அரசியல் பரபரப்புக்கிடையில், நடிகையும் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜூலி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.


அந்த வீடியோவில், விஜயை நேரடியாகக் குறிவைத்து ஜூலி பல கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக, டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்தது குறித்து அவர் கேள்வி எழுப்பி, “நாம் இப்படி ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு புகார் கொடுப்பது சரியா?” என விமர்சித்துள்ளார். மேலும், புதியதாக அரசியலுக்கு வருபவரிடம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜூலி மேலும் தீவிரமாகக் கூறுகையில், “உனது கட்சியில் யாருமே வெற்றி பெற மாட்டார்கள். நீ கூட உன் நட்சத்திர அந்தஸ்தை வைத்து வெற்றி பெறக்கூடாது.” என்று சவால் விடுத்துள்ளார். அதோடு, விஜய் போட்டியிடும் தொகுதியை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டு, “நான் அந்த தொகுதியில் இறங்கி பிரச்சாரம் செய்வேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் முன்வைத்து, அந்த விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என கூறியுள்ளார். அவரது இந்த நேரடி மற்றும் சவாலான பேச்சு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரை ஆதரிக்க, சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். மொத்தத்தில், ஜூலியின் இந்த வீடியோ தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு மேலும் தீனி சேர்த்துள்ளது.

Advertisement

Advertisement