பான் இந்திய திரைப்படமாக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பகத் பாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படத்தை சுகுமார் எழுதி இருந்தார். இந்த படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
புஷ்பா படத்தின் முதலாவது பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியாகி சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. அதுவரையில் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் அல்லு அர்ஜுன்.
d_i_a
இதை தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது ரசிகர்களுடன் சென்று பார்வையிட்டு இருந்தார் அல்லு அர்ஜுன். ஆனால் எதிர்பாராத விதமாக கூட்டத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவருடைய மகனும் கூட்ட நெரிசலில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் மூளை சாவடைந்த நிலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விவகாரம் தொடர்பில் அல்லு அர்ஜுன் சிறைச்சாலை சென்று வந்ததோடு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரண்டு கோடி ரூபாய் மட்டும் இழப்பீடு வழங்கியிருந்தனர். மேலும் இந்த சம்பவம் தென்னிந்திய திரை உலகிலேயே மிகப்பெரிய அதிர்ச்சியையும் படிப்பினையையும் கொடுத்திருந்தது.
இந்த நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறார்கள் இரவு 11 மணிக்கு மேல் திரையரங்குகளில் நுழைய தடைவிதித்து தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த நிலையிலேயே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!