• Jan 08 2026

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் செஞ்சுரி அடித்த நிவின் பாலியின் சர்வம் மாயா

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

சாதாரண இளைஞனாக அறிமுகமாகி, பிரேமம் படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நிவின் பாலி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனக்கென தனி இடத்தை தக்க வைத்தார். ஆனாலும் இடையில் இவருக்கு சறுக்கல் ஏற்பட்டது. இவர் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்தன. 

நிவின் நடிப்பில் பல படங்கள் வந்தாலும், ஒரு படத்திலும் அவருக்கு கம்பேக் கிடைக்கவில்லை. ஆனாலும் கிறிஸ்மஸ்  தினத்தன்று வெளியான சர்வம் மாயா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படம் முதல் காட்சியில் கூட விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

சுமார் நான்கு நாட்களில் மட்டுமே இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலித்தது. புதிய படங்கள் வெளியானாலும் அவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளி ஆதிக்கம் செலுத்தியது சர்வம் மாயா. 

இந்த நிலையில், சர்வம் மாயா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் உறுதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் . 

அதன்படி இந்த படம் வெளியாகி 7 நாட்களில்  உலகளாவிய ரீதியில் 67 கோடியும், இந்திய அளவில்  கிட்டதட்ட 30 கோடியாகவும்  வசூலித்துள்ளது. 

மேலும் கேரளாவில் மட்டும் ஏழு நாட்களில் 30.5 கோடி வசூலித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து 2.27 கோடியும், தமிழ்நாட்டில் 1.04 கோடியும் வசூலித்துள்ளது. ஆந்திரா-தெலுங்கானா பகுதிகளில் இருந்து 35 லட்சம் வசூலித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement