• Sep 20 2024

விக்ரமின் கோப்ரா திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- ட்ரெய்லர் வெளியீடு எப்போது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

மகான் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோப்ரா. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பானது சில மாதங்களுக்க முதல் தான் முடிவுற்றது. இதனை அடுத்து இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இயக்குநருடன் மீண்டும் கைகோர்க்கவுள்ளதாக விக்கரம் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.


இந்த நிகழ்வில் விக்ரம் கோப்ரா ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பதையும் அறிவித்துள்ளார். பட ரிலீஸூக்கு 10 நாட்கள் முன்னர் ட்ரெய்லர் வெளியாகும் என அவர் கூறியுள்ளார். இன்னும் சில தினங்களுக்குள்ளாக ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது தவிர விக்ரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படமும் செம்டெம்பர் மாதம் பிரமாண்டமாகக் காத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement