• Sep 19 2024

தியேட்டரில் ரஜினி, அஜித் படங்கள் மட்டும்தான் பார்ப்பேன் - கெத்து காட்டும் அனிருத்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்திற்கு இசையமைத்து அறிமுகமானவர். இந்த படத்தில் வை திஸ் கொலவெறி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்.

இவர் தனது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களான உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தல, தளபதி ஆகியோருக்கு இசையமைத்து வருகின்றார். இன்றைய கால இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட பாடல்கள் பிடிக்கும் என்பதை உணர்ந்து இசை அமைக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கு அதிகப்படங்கள் கைவசம் வைத்திருப்பவர் அனிருத். இவர் இசையில் சமீபத்தில் ரிலீஸான பீஸ்ட், விக்ரம்,  திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.



தற்போது, ஜெயிலர் மற்றும் இந்தியன்-2 படங்களுக்கான இசையமைப்பில் அனிருத் பிஸியாகவுள்ளார்.

அத்தோடு தனுஷின் திருச்சிற்றம்பலம் ரிலீஸான நிலையில் இதுகுறித்த ஒரு   நிகழ்ச்சியில் பேசிய அனிருத், நான் தியேட்டரில் சென்று கம்மியாகத்தான் பார்ப்பேன். அதிலும், ரஜினி மற்றும் அஜித் படங்கள்தான் அதிகம் தியேட்டரில் பார்ப்பேன். அதன்பிறகு தனுஷ் படங்கள் பார்ப்பேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் நான் அதிகமாக தியேட்டர்ல FDFS பார்க்க மாட்டேன் முதல தலைவர் படம் அப்பறம் தல படம் மட்டும் தான் பாப்போம் நான் மேடைக்காக இதை சொல்லல @anirudhofficial கெத்து ப்ரோ




Advertisement

Advertisement