• Sep 20 2024

சூர்யாவின் 41 படத்திலிருந்து இன்று மாலை வெளியாகவுள்ள புதிய அப்டேட்- செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கதாநாயகனாக மட்டும் அல்லாது நெக்கட்டிவ் ரோல்களிலும் நடித் அசத்தி வரும் நடிகர் தான் சூர்யா. அந்த வகையில் இவர் கமல்ஹாசன் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்ததை விட சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இவர் கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளியாகிய சூரரைப் போற்று ஜெய்பீம் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இவர் தற்பொழுது தனது 41 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை இயக்குநர் பாலா இயக்கி வருகின்றார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புகள் யாவும் நிறைவடைந்து விட்டன.

இதற்கிடையே தற்போது அப்படத்தின அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இன்று இயக்குநர் பாலாவின் பிறந்தநாள் என்பதால் மாலை 6 மணிக்கு அப்படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement