• May 20 2024

கடுங் கோபத்தில் கூல் சுரேஷை அடிக்கப் பாய்ந்த நடிகர் மன்சூர் அலிகான்- அட இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் தற்பொழுது ட்ரெண்டிங் ஆகி வரும் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் கூல் சுரேஷ். இவர் சமீபகாலமாக எந்த நடிகரின் திரைப்படம் வெளியாகினாலும் தியேட்டருக்கு சென்று முதல் ஆளாக பார்த்து விடுகின்றார்.

இவர் நெகட்டிவ்வாக மட்டும் இல்லாமல் பாசிட்டிவ்வாகவும் தனது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றார்.குறிப்பாக வெந்து தணிந்தது காடு, வணக்கத்தை போடு என்ற இவரது டயலாக் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் ரிலீசின்போது இவர் தியேட்டர் வாசலில் பல் துலக்கிக் கொண்டே பேட்டியளித்திருந்தார். இந்த நிகழ்வு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து விமர்சனங்களை எழுப்பியபோதிலும் அதுவும் கூல் சுரேஷிற்கு விளம்பரத்தை கொடுத்திருந்தது.

சமீபத்தில் யாஷிகா ஆனந்தின் பெஸ்டி படத்தின் பிரமோஷனின்போது யாஷிகாவின் கைகளை தடவிக் கொடுத்துக் கொண்டே இவர் பேட்டியளித்திருந்தார். மேலும் அவரது படத்தின் ட்ரெயிலர் வயாக்ரா சாப்பிட்ட ஃபீலை கொடுத்ததாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து பல சேட்டைகளை அரங்கேற்றிவரும் கூல் சுரேஷ் தற்போது பக்ரீத் பண்டிகையையொட்டி மன்சூர் அலிகான் பொதுமக்களுக்கு கொடுத்திருந்த பிரியாணி விருந்தில் கலந்து கொண்டு மன்சூர் அலிகானுக்கும் வணக்கத்தை போட்டார். அந்த விருந்து குறித்து விளம்பரம் செய்யும் வகையில் பேசினார்.

இதையடுத்து அவ்வாறு விளம்பரப்படுத்த வேண்டாம் என்று தொடர்ந்து மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்டார். ஆனாலும் தன்னுடைய செயலை சிறப்பாகவே செய்துவந்தார் கூல் சுரேஷ். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மன்சூர் அலிகான் அவரை அடிக்க பாய்ந்தார். இதையடுத்து என்னை அடிக்க வரார் என்று விளையாட்டாக கூல் சுரேஷ் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement