• Apr 28 2024

துப்பாக்கியுடன் தோற்றம் அளிக்கும் கமல்- விக்ரம் படத்தின் புதிய போஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார் உலகநாயகன் கமல்.தனது இயல்பான நடிப்பால் தனக்கென ஒரு அடையாளத்தையும் தனக்கென ரசிகர் கூட்டத்தையும் கொண்டுள்ள உலகநாயகன் நடிப்பதில் மட்டுமன்றி நடனம் ஆடுவதிலும் பாடல் படிப்பதிலும் தனித்திறமை கொண்டுள்ளார்.

200க்கு மேற்பட்ட படங்களில் நடித்த கமல் தேசிய விருதையும் பெற்றுள்ளார் . இந்த நிலையில் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் திரைக்கு வருமுன்னர் பத்தல பத்தல என்கின்ற பாடல் அனிரூத்தின் இசையமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது , இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது .

அதுவும் உலகநாயகன் துப்பாக்கியுடன் தோற்றம் அளிக்கும் இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்பை எகிற வைத்திருக்கின்றது. இனி அதிரடி சண்டை காட்சிகளுக்காக காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

https://www.youtube.com/embed/lpC-cl5Jgv4
  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement