• Sep 30 2023

காதல் கணவரின் பிறந்தநாளில் செம சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா- வெண்மதி வெண்மதியே’ பாடல் பாடி ஜோடியாக Vibe ஆன வீடியோ

stella / 1 week ago

Advertisement

Listen News!

2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் -நயன்தாராவிற்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். 

இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இவர்கள் சமீபத்தில் தங்களது இரட்டை குழந்தைகளுடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள்.


இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நேற்றைய தினம் தன்னுடைய 38வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். இவருக்கு நயன்தாரா செம சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement