• Jan 20 2025

விக்னேஷ் சிவனுக்கு நயன் கொடுத்த மரியாதை.. இன்ஸ்டாவில் கலக்கும் வீடியோ

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

2007ம் ஆண்டு தனது திரை உலக பயணத்தை தொடங்கியவர் தான் விக்னேஷ் சிவன். இதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராகவும் எழுத்தாளராகவும் அறிமுகமானார்.

தமிழில் நல்ல படங்களை இயக்கி வரும் விக்னேஷ் சிவன் 2015 ஆம் ஆண்டு வெளியிட்ட திரைப்படம் தான் நானும் ரவுடி தான். இந்த திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த இயக்கங்களுக்கான விருதை வழங்கி சிறப்பித்தது சைமா.

இதன் போது தான் பிரபல நடிகையான நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதற்குப் பிறகு தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார் விக்னேஷ்.


2022 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டாரை திருமணம் செய்து தற்போது உயிர் - உலக் என்ற இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில், 'நீதான் இந்த உலகத்தில் சிறந்த அப்பா' என்று அவருக்கு வாழ்த்துக்களை கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நயன்தாரா. தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement