• Jun 26 2024

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தொடரும் திருமணங்கள்! குட் நைட் பிரபலத்திற்கும் டும்.. டும்.. டும்..

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஹிட் அடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் குட் நைட். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனரான விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரைச்சல் ரபேக்கா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது.

இந்த நிலையில், குட்நைட் பட இயக்குனரான விநாயக்  சந்திரசேகருக்கு திருமணம் நடைபெற்ற முடிந்துள்ளது. தற்போது அவரது திருமணத்திற்கு பலர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


அதன்படி குட் நைட் பட இயக்குனர், பிரியா என்பவரை திருமணம் செய்துள்ளார். தற்போது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.


Advertisement

Advertisement