• Jan 19 2025

கோவில் கோவிலாக ஏறி இறங்கும் நயன் ஜோடி..! செல்பி எடுத்து கொண்டாடிய பக்தர்கள்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனராக காணப்படும் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் ஆனார். இது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்த போதும், அதை பொருட்படுத்தாமல் தமது வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.


அதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜோடியாக சேர்ந்து தரிசனம் செய்துள்ளார்கள்.


அதனைத் தொடர்ந்து அங்குள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுடன் செல்பி எடுத்து அவர்களை மகிழ்வித்துள்ளார். அதன்பின் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார்கள்.


பின்பு சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமையில் விக்னேஷ் சிவன் தலப்பாகை அணிந்து தரிசனம் செய்துள்ளார். தற்போது இவர்கள் கோவில் தரிசனம் செய்த படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement