• Sep 14 2024

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ருத்ர தாண்டவமாடும் நானியின் சூர்யாவின் சாட்டர்டே! முதல் நாள் வசூல்?

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் நானியின் 31 வது படமாக நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியான படம் தான் சரிபோதா சனிவாரம் படம். இந்த படம் தமிழில் சூர்யாவின் சாட்டர்டே என்ற பெயரில் வெளியாகி உள்ளது. தற்போது வெற்றிகரமாக தமிழிலும் ஓடி வருகின்றது. இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நானியுடன் எஸ்.ஜே சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மூலம் எஸ்.ஜே சூர்யா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார்.

நடிகர் நானி - விவேக் ஆத்ரேயா உடன் இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கிய படம் தான்  சரிபோதா சனிவாரம். இந்த படம் சர்வதேச அளவில் ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.


இந்த படத்தில் பிரியங்கா மோகனுக்கு அழுத்தமான கேரக்டர் காணப்பட்டுள்ளதோடு அவர் நடிப்பிலும் அசத்தியுள்ளார். தமிழ், தெலுங்கில் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த படம் பான் இந்திய படமாக வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் அதிகாரபூர்வ வசூல் கலெக்ஷனை பட குழுவினர் அறிவித்துள்ளனர். முதல் நாளிலேயே 24.11 கோடிகளை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் கலெக்ஷன் இன்னும் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.



Advertisement

Advertisement