• Nov 22 2024

'அப்படியெல்லாம் என் பொண்ணு தப்பா பேசல' மகளுக்கு வக்காளத்து வாங்கும் வனிதா!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் வனிதா மகள் ஜோவிகாவும் கலந்து கொண்டுள்ளார். அதன்படி, பிக் பாஸ் டைட்டிலை ஜோவிகா வெல்வதற்காக வெளியே வனிதா விஜயகுமார் ஏகப்பட்ட வேலைகளை பார்த்து வருவதாக குற்றமும் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜோவிகா தமிழில் ஒரு படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் கமிட் ஆகி உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிக்பாஸ் பிரபலம் என்கிற பெயருடன் என்ட்ரி கொடுக்க வனிதா மூலமாக விஜய் டிவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

அதேவேளை, முதல் வாரத்திலேயே ஜோவிகா போல்டாக வாய் திறந்து பேசியதும் எல்லாருமே ஜோவிகாவுக்கு ஆர்மியெல்லாம் ஆரம்பித்து கொண்டாடி வந்தனர். ஆனால் தற்போது அவரை உடனடியாக வெளியே அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கைகளை  முன்வைத்துள்ளனர்.


இந்நிலையில், அர்ச்சனாவை பார்த்து வாயை மூடு என ஜோவிகா செய்ததும், அசிங்கமான வார்த்தை போட்டும் அவர் பேசியதாக சர்ச்சை வெடித்துள்ளது.

இவ்வாறான நிலையில், 'அப்படியெல்லாம் என் பொண்ணு பேசல' என வனிதா விஜயகுமார் ட்வீட் போட்டு பிக்பாஸ் வீட்டை விட வெளியுலகில் தான் விஷம் நிறைந்திருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement