• Dec 05 2023

பிரதீப் என்ன சைக்கோவா? பைத்தியத்தை யாரும் உள்ள விடவும் மாட்டாங்க! கொந்தளிக்கும் அறந்தாங்கி நிஷா

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.பிரதீப்பிற்கு ரெட் காட் கொடுக்கப்பட்ட விஷயம் தான் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் சோஷியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. பிரதீப் ஆண்டனிக்கு பிக்பாஸ் பிரபலங்கள் மட்டுமின்றி பல லட்சம் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதீப்பின் நண்பர் கவின் முதல் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களான சினேகன், பிரியங்கா, அமீர், பாவனி, நிரூப், அசீம், நிவாஷினி, ஆரி அர்ஜுனன் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில், பிக்பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கேற்ற அறந்தாங்கி நிஷா தற்போது பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியது தவறு என்று சொல்லி தனது கருத்து முன்வைத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒருத்தர் மீது பழிச்சொல் சொல்லி, அவரை வெளியே அனுப்பினால் கடைசிவரை பலரும் அவரை அப்படித்தான் பார்ப்பார்கள். இச் சம்பவத்தில், பிரதீப் ஆண்டனியின் கருத்தை கமல் சார் ஒருமுறை என்றாலும் கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு கேட்டிருந்தால் அவனே  அனைத்தையும் சொல்லிவிட்டு இந்தப் பெண்களுடன் இருக்க முடியாது என வீட்டை விட்டுக் கிளம்பி இருப்பான்.


அதுமட்டுமின்றி, பைத்தியத்தை எல்லாம் யாரும் உள்ளே அனுப்ப மாட்டாங்க. அவன் சைக்கோ இல்ல. அவன சைக்கோ என்று உள்ளே இருந்து கொண்டு சொன்னவர்கள் தான் சைக்கோ என நிஷா க்ளீன் போல்டு செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement