நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புடன் ரிலீஸாக இருக்கிறது. சமூக கருத்துகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றியுள்ளார். சமூக கருத்துகளை பிரதிபலிக்கும் கதைக்களம், இசை மற்றும் நடிப்பு மூலம் படத்திற்கு முன்பே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் நடந்த பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரவி மோகன் உரையாற்றினார், அவருடைய பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரவி மோகன் அதன்போது, “ முதுகில் அடிப்பவர்களைப் பற்றி எனக்கு கவலை கிடையாது. கண்ணுக்கு தெரிபவர்களை பற்றி தான் கவலை. அனைவருக்கும் ஒரு அண்ணனாக சொல்கிறேன், சுயமரியாதையை மட்டும் யாரும் இழக்காதீர்கள்.” என்று கூறியுள்ளார்.
ரவி மோகனின் இந்த பேச்சு ரசிகர்களிடையே பல கேள்விகளை உருவாக்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவரது பேச்சின் கிளிப்ஸ், மிம்ஸ் மற்றும் ரியாக்ஷன்கள் பரவி வருகிறது.
Listen News!