• Jun 18 2026

சினிமாவை விட இதில் தான் அஜித்துக்கு வெறி.. வையாபுரி பேச்சால் கிளம்பிய சர்ச்சை.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் குறித்து நடிகர் வையாபுரி சமீபத்தில் பகிர்ந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பல ஆண்டுகளாக அஜித்துடன் நெருக்கமாக பழகிய அனுபவம் கொண்ட வையாபுரி, அவரது வாழ்க்கை நோக்கம் மற்றும் மனநிலையை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.


அவர் கூறுகையில், “அஜித் ஆரம்பத்திலிருந்தே அரசியலுக்கு வரமாட்டேன் என்று தெளிவாக சொல்லிவிட்டார். அவருக்கு அரசியலில் எந்த ஆர்வமும் இல்லை. அவரது முழு கவனமும் தற்போது கார் ரேஸிங் மீது தான் உள்ளது. ஒரு நாள் உலகத் தரத்தில் பைலட்டாக வேண்டும் என்பதே அவரது பெரிய கனவு. அதற்காகவே அவர் தொடர்ந்து தனது நேரத்தையும் உழைப்பையும் செலவழித்து வருகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ரசிகர்கள் குடும்பத்தை முதலில் கவனிக்க வேண்டும் என்பதையே அஜித் எப்போதும் விரும்புகிறார். நடிகர்களை வாழ்க்கையின் மையமாக மாற்றிக்கொள்ள வேண்டாம் என்பதையும் அவர் பலமுறை மறைமுகமாக சொல்லியிருக்கிறார். அவர் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் நம்பர் ஒன்னாக வர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.” என வையாபுரி தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கள் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


Advertisement

Advertisement