• Sep 19 2024

அம்மா ஒவ்வொரு நாளும் உங்களை மிஸ் செய்கிறேன்- குழந்தைப் பருவ புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக் கூறிய ஜான்வி கபூர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரை உலகில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தெலுங்கு நடிகையான இவர் கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இவர் தமிழில் பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகிய 16 வயதினிலே திரைப்படம்  சிறந்த நடிகையாக அறிமுகப்படுத்தியது.


இதனைத் தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம் வந்த இவர் பிரபல தயாரிப்பாளரான போனிகபூரை கடந்த 1996 ஆம் ஆண்டு மணமுடித்தார். இவர்களுக்கு ஜான்விகபூர், குஷி கபூர் என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.சினிமாவிலும், சொந்தவாழ்க்கையிலும் மிகவும் சிறப்பான தருணங்களை ருசித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு அகால மரணமடைந்தார்.


இவரைப் போலவே இவருடைய மகளான ஜான்வி கபூரும் நடிப்பில் அசத்தி வருகின்றார். இவர் நடிப்பில் அண்மையில் குட் லக் செரி எனும் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இது தவிர இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில், சிறு வயதில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து இன்று தனது அம்மாவின் பிறந்தநாள் என்பதினால் வாழ்த்தையும் கூறியுள்ளார். அம்மா ஒவ்வொரு நாளும் உங்களை மிஸ் செய்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement