• May 19 2024

தமன்னாவுக்கு தெரிந்த இந்த மரியாதை டாப்ஸிக்கு தெரியவில்லையே- கடுமையாக விளாசி வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல்யமான நடிகைகளாக வலம் வருபவர்கள் தான் தமன்னா  மற்றும் டாப்ஸி. இவர்கள் இருவருக்கும் தமிழ் சினிமாவில் படவாய்ப்புக்கள் குறைந்ததால் பாலிவூட் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் வெப் சீரியல்களிலும் நடித்து வருகின்றனர். அதே போல படவிழாக்களிலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.


அந்த வகையில் அண்மையில், மெல்பர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர். அப்போது, தமன்னா... தன்னுடைய காலில் அணிந்திருந்த ஹீல்ஸை அவிழ்த்து விட்டு குத்து விளக்கு ஏற்றியுள்ளார்.


 இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக, தமன்னாவின் இந்த செயலை பலரும் மனதார பாராட்டி வருகிறார்கள். தமன்னாவுக்கு தெரிந்த இந்த மரியாதை டாப்ஸிக்கு தெரியவில்லையே என சிலர் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement