• May 25 2026

அசத்தலான லுக்கில் மோகன்லால்.. வெளியானது 'திரிஷ்யம் 3' திரைப்படத்தின் புதிய போஸ்டர்.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

திரிஷ்யம் 3 திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் மற்றும் திரிஷ்யம் 2 ஆகிய இரு பாகங்களும் திரில்லர் வகையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. மலையாளத்தில் உருவான இந்தக் கதைகள் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியை கண்டது குறிப்பிடத்தக்கது.


இந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே கூட்டணியில் மூன்றாவது பாகமான ‘த்ரிஷ்யம் 3’ உருவாகியுள்ளது. ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஆரம்பத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி பான் இந்திய அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர்.


இந்நிலையில், தற்போது இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் மே 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement