• Jul 09 2025

‘பறந்து போ’ பட விழாவில் சிம்புவின் திருமண கேள்வி.! மிர்ச்சி சிவாவின் கலகலப்பான பதில் வைரல்

subiththira / 13 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன்னிச்சையான பாணியில், உணர்வுகளுடனும் நகைச்சுவையுடனும் கதைகளை சொல்லும் இயக்குநர் ராம், தற்போது 'பறந்து போ' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 4ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள இப்படம், குழந்தையின் பார்வையில் வாழ்க்கையை பார்க்கும் ஒரு அழகான பயணமாக அமைந்திருந்தது.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜூலை 7ஆம் தேதி மதுரையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்திருந்தனர். அதன்போது, நடிகர்கள் மற்றும் இயக்குநர் கலந்து கொண்டு படம் பெற்ற வரவேற்பை பகிர்ந்து மகிழ்ந்தனர்.


செய்தியாளர் ஒருவர் மிர்ச்சி சிவாவை பார்த்து, “சிம்புவுக்கு எப்போது கல்யாணம் நடக்கப்போகுது?” என்ற  கேள்வியை எழுப்பினார். அந்தக் கேள்விக்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். ஏனென்றால், இது ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் புரியாத புதிராக இருந்து வரும் பிரபலமான கேள்வி என்பதாலேயே அந்த கலகலப்பு.

அதற்கு மிர்ச்சி சிவா மிகவும் நகைச்சுவையுடன்,“சிம்பு சார் இந்த மாதிரியான கேள்விகளைத் தவிர்க்கணும்! அதனால, சீக்கிரம் திருமண அழைப்பிதழை எல்லாருக்கும் கொடுத்துடுங்க!” என்று பதிலளித்திருந்தார். இத்தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement