• Dec 04 2023

தமிழ் கலாச்சாரத்தை செருப்பால அடிச்ச மாதிரி பண்றாங்க- பிக்பாஸ் குறித்து ஓபனாகப் பேசிய ஷகிலாவின் மகள் மிலா

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனின் வலுவான போட்டியாளராக கருதப்பட்ட பிரதீப் கடந்த வாரம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கூல் சுரேஷை தகாத வார்த்தைகளில் பேசிய விவகாரத்தில் உரிமைக்குரல் எழுப்பிய போட்டியாளர்கள் நிலையில், பிரதீப்பால் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டியதால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.


பிரதீப் வெளியேறியதில் இருந்தே இதுதொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகிறது. பலரும் நியாமற்ற எவிக்‌ஷன் என்று கூறி, கமல்ஹாசன் நடுநிலையாக முடிவெடுக்கவில்லை எனவும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிலா இது குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, சின்னப்பிள்ளைகள் எல்லாம் இந்த சீசனில் போட்டியாளராக எடுத்துள்ளார்கள். தமிழ் கலாச்சாரத்தை அழிக்கிறமாதிரி உள்ளே பண்ணீட்டு இருக்கிறாங்க. மணி, ரவீனாவும் மாயா குரூப்ல தான் இருக்கிறாங்க.


இதில தனியாக யாரும் விளையாடல குரூப்பாகத் தான் விளையாடிட்டு இருக்கிறாங்க.பிக்பாஸிற்குள்ள போய் பெயரை கெடுத்திட்டு வர எனக்கு விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement