சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவியின் டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் நாளைய ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய எபிசோடில் சாதாரண கதைக்களமாக தான் சென்றுள்ளது. அதாவது அண்ணாமலை வேலைக்கு கிளம்ப குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக அனுப்பி வைக்கின்றனர்.
ரோஹினி, தனது மகன் க்ரிஷ் பள்ளியில் அண்ணாமலை வேலை செய்வது தெரிந்ததும் அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறார். பின் அடுத்து மனோஜ், ரோஹினியை அழைத்துக்கொண்டு புதியதாக வாங்க இருக்கும் வீட்டை சுற்றிப்பார்க்க செல்கிறார். வீடு அவர்களுக்கு பிடித்து விடுகிறது இவ்வாறு தான் இன்றைய நாள் எபிசோட் அமைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த ப்ரோமோவில் மீனா தனக்கு இன்று நல்ல லாபம் வந்துருக்கு 700 ரூபா சம்பாரிச்சி இருக்கேன் என்று சொல்கிறார். அதை கேட்டு முத்து சந்தோசப்படுகிறார். இதனை உண்டியவில் போடுகிறேன் என்கிறார். அதோடு நான் உங்களை விட அதிகம் சம்பாதிக்கிறேன் என கூற முத்து முகமே மாறிவிடுகிறது. ஆனால் மீனா அதை கவனிக்காமல் சென்று விடுகிறார். இனி என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!