விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் முன்னணி காமெடியனாக இருப்பவர் மதுரை முத்து. இவர் பொருட்களை வைத்து காமெடி பண்ணுவது, வார்த்தையை வைத்து காமெடி பண்ணுவது என விஜய் டிவியில் பெஸ்ட் காமெடியனாக இருக்கிறார். பல்வேறு tv நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் பட்டிமன்றங்கள், மேடை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் மதுரை முத்துவின் முதல் மனைவி லேகா கடந்த 2016ம் வருடம் கார் விபத்தில் மரணம் அடைந்தார். இது அனைவரும் அறிந்த விடயமே. முதல் மனைவி உடன் மதுரை முத்துவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு மதுரை முத்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது குடும்பமாக வாழ்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது மதுரை முத்து இறந்த தனது முதல் மனைவி, அப்பா, அம்மா அகியோருக்காக வீட்டின் அருகிலேயே ஒரு கோவில் கட்டி வருகிறார். இதனை வீடியோ எடுத்து தனது இன்ஸராகிராமில் பதிவிட்டுள்ளார். தனது சொந்த வீட்டில் காட்டுவதாக குறிப்பிட்டு விடியோவை ஷேர் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ
Listen News!