• Jun 28 2026

வயசு ஏற ஏற அழகு கூடுதே! - 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி மீனாவின் வேறலெவல் போட்டோஷூட்

shali / 2 months ago

Advertisement

Listen News!

மீனா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக நீண்ட காலமாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். குழந்தை பருவத்திலேயே திரையுலகில் அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துத் தனது திறமையை நிரூபித்து வருகிறார். 


தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ள அவர், தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளார்.


அவரது இயல்பான நடிப்பு, முகபாவனைகள் மற்றும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற அணுகுமுறை ஆகியவை அவரை பல தலைமுறை ரசிகர்களிடமும் பிரபலமாக்கியுள்ளது. ஹீரோயினாக மட்டுமல்லாமல், பல்வேறு விதமான பாத்திரங்களில் நடித்தும் தன்னை மாற்றிக் கொள்ளும் திறனை மீனா தொடர்ந்து காட்டி வருகிறார்.

இந்நிலையில், அவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில் அவர் மிகவும் அழகாகவும், இளமையாகவும் தோன்றியுள்ளதால் ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். 



Advertisement

Advertisement